பதிவு செய்த நாள்
31
மே
2018
12:05
கூடலுார்: கூடலுார், சிவன்மலையில் நடந்த கிரிவலம் ஊர்வலத்தில் பக்தர்கள் பங்கேற்றனர். கூடலுார், நம்பாலகோட்டை சிவன்மலை, சிவன் கோவிலில், பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று முன்தினம், கிரிவலம் நிகழ்ச்சி நடந்தது. காலை, 7:30 மணிக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள்; 11:00 மணிக்கு உச்சகால பூஜையும் நடந்தது.மாலை, 3:30 மணிக்கு, மலை அடிவாரத்தில் உள்ள விநாயகரை வழிபட்டு, சிவன் மலையை சுற்றி, பக்தர்கள் கிரிவலம் ஊர்வலம் வந்தனர். ஊர்வலம், கோவிலில் நிறைவு பெற்றது. மாலை, 6:00 மணிக்கு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.