கமுதி: கமுதி என்.கரிசல்குளத்தில் காளியம்மன், முத்தாலம்மன் கோவில் வைகாசி பொங்கல் விழா துவங்கியது. விழாவை முன்னிட்டு கரகம், முளைப்பாரி எடுத்தல், அக்னிச் சட்டி எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று முன்தினம் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுதல், கிடா வெட்டுதல், அம்மனுக்கு ஆராதனை சிறப்பு பூஜை உட்பட நிகழ்ச்சி நடந்தது. பெண்கள் முளைப்பாரியை கண்மாய் கரையில் கரைத்தனர்.