பதிவு செய்த நாள்
01
ஜூன்
2018
12:06
திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் சரவணப்பொய்கையின் புனிதம் காக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் அனிஷ் சேகர் உத்தரவிட்டார். பொய்கையில் மக்கள் துணி துவைத்தும், குளித்தும் வருகின்றனர். மழை பெய்தால் மட்டுமே பொய்கைக்கு தண்ணீர் வரும். இரு ஆண்டுகளாக மழையின்றி தண்ணீர் மாசடைந்துள்ளது. இப்பொய்கையை கமிஷனர் ஆய்வு செய்தார். புனிதம் காக்கவும், மக்கள் துணி துவைக்க, குளிக்க மாற்று ஏற்பாடுகள் செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அங்குள்ள கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் உத்தரவிட்டார். கோயில் துணை கமிஷனர் மாரிமுத்து, உதவி கோட்ட பொறியாளர் சிவமுருகானந்தம், மாநகராட்சி உதவி கமிஷனர்கள் கவுசலாம்பிகை, பழனிச்சாமி, பி.ஆர்.ஒ., சித்திரவேல், செயற்பொறியாளர்கள் சேகர், ராஜேந்திரன், சுகாதார அலுவலர்கள் ராஜ்கண்ணன், சிவசுப்பிரமணியன், ஆய்வாளர் சுப்புராஜ் பங்கேற்றனர்.