ஒட்டன்சத்திரம், அத்திக்கோம்பை, குமாரசாமிகவுண்டன்புதுார், பெயில்நாயக்கன்பட்டியில் உள்ள காளியம்மன் கோயில்களில் உற்ஸவ திருவிழா நடந்தது. பதினைந்து நாட்களுக்கு முன்பு சாமி சாட்டுதழுடன் தொடங்கியது. புதன் அதிகாலை கரகம் பாலித்து, கங்கையிலிருந்து அம்மன் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது. மாவிளக்கு பூஜை நடந்தது. பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து அம்மனை வழிபட்டனர். நேற்று மாலை பழச்சிறப்பு ஊர்வலத்தை தொடர்ந்து, மஞ்சள் நீராட்டுடன் அம்மன் கங்கையில் கரைக்கப்பட்டது.