சென்னிமலை முருகன் கோவிலில் வாடா விளக்கில் நெய் ஊற்ற தடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூன் 2018 12:06
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில், வாடா விளக்கில், நெய் ஊற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னிமலை முருகன் கோவிலில், பக்தர்கள் தனித்தனியாக விளக்கேற்ற தடை விதித்து, ஐந்து இடங்களில் வாடா விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் எண்ணெய், நெய் ஊற்றலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பக்தர்கள் ஊற்றும் நெய், மிக மோசமாக உள்ளது; துர்நாற்றம் ஏற்பட்டது. எனவே, வாடா விளக்கில், இனி எண்ணெய் மட்டுமே ஊற்ற வேண்டும்; எக்காரணம் கொண்டும் நெய் ஊற்றக்கூடாது, என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.