பதிவு செய்த நாள்
02
ஜூன்
2018
03:06
* ஜூன் 2, வைகாசி 19, சனி: சங்கடஹர சதுர்த்தி, விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் உபய நாச்சியார்களுடன் தேர்,
* ஜூன் 3, வைகாசி 20, ஞாயிறு: முகூர்த்த நாள், கும்பகோணம் உப்பிலியப்பன் பெருமாள் புறப்பாடு, மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் முத்துப்பல்லக்கு,திருவல்லிக் கேணி குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
* ஜூன் 4, வைகாசி 21, திங்கள்: முகூர்த்த நாள், திருவோண விரதம், வாஸ்து பூஜை நேரம்: காலை 9:58 – 10:34 மணி, கீழ்த்திருப்பதி * கோவிந்தராஜப்பெருமாள் கோயிலில் கருடாழ்வாருக்கு
திருமஞ்சனம், சங்கரன்கோவில் கோமதி அம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* ஜூன் 5, வைகாசி 22, செவ்வாய்: சுவாமிமலை முருகன் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்,திருவல்லிக் கேணி ஆண்டாளுக்கு திருமஞ்சனம், மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் தேர், அகோபில மடம்
அழகியசிங்கர் திருநட்சத்திரம்.
* ஜூன் 6. வைகாசி 23, புதன்: தேய்பிறை அஷ்டமி விரதம், பைரவருக்கு வடை மாலை அணிவித்து வழிபடுதல்,திருநெல் வேலி நெல்லையப்பர் கோயிலில் மூவர் உற்ஸவம் ஆரம்பம், மதுரை மாவட்டம் * சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் மஞ்சள் நீராட்டு விழா.
ஜூன் 7, வைகாசி 24, வியாழன்: சுவாமிமலை முருகன் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ராமருக்கு திருமஞ்சனம்.
* ஜூன் 8, வைகாசி 25, வெள்ளி: ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் தங்கப்பல்லக்கு, திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வேத வல்லித் தாயார் திருமஞ்சனம், மதுரை மீனாட்சி அம்மன் பொன்னூஞ்சல்.