ராமநாதபுரம் ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் புஷ்ப பல்லாக்கு வீதியுலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூன் 2018 03:06
ராமநாதபுரம் : ராமநாதபுரம் செளபாக்சிய நாயகி சமேத ஆதிரெத்தினேஷ்வரர் கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு புஷ்ப பல்லாக்கு வீதியுலா நடைபெற்றது.
ராமநாதபுரம் வெளிப்பட்டணம் சவுபாக்கிய நாயகி சமேத ஆதி ரெத்தினேஸ்வரர் கோயில், வைகாசி வசந்த உற்சவ விழா, மே 20ல் காப்பு கட்டுதல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமி வீதி வலம் நடந்தது. விழாவில் நேற்று(1ம் தேதி) புஷ்ப பல்லாக்கு வீதியுலா நடைபெற்றது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.