பரமக்குடி;பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் நேற்று இரவு கண்ணாடி சேவை நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் இரவு கள்ளழகர் கோலத்துடன் பெருமாள் பூப்பல்லக்கில் அலங்காரமாகி, இரவு முழுவதும் நகர் வலம் வந்தார். நேற்று காலை 10:30 மணிக்கு கோயிலை அடைந்தார். இரவு கள்ளழகர் கண்ணாடி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று உற்சவசாந்தி, நாளை கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலாவுடன் விழா நிறைவடையும்.