திருவாடானை:திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் வருவாய் தரும் இனங்களுக்கான ஏலம் நேற்று நடந்தது. இதில் வெள்ளிமலர் ரூ.9 லட்சத்து50 ஆயிரத்து 100, கோழி ரூ.16 லட்சத்து 71 ஆயிரம், உப்பு ரூ.4 லட்சத்து 42 ஆயிரம், கோழிமுட்டை ரூ.4 லட்சத்து 35 ஆயிரம், வேப்பிலை ரூ.3 லட்சத்து ஆயிரம், பிரசாதம் ரூ.2 லட்சத்து 53 ஆயிரம், முடி ரூ.40 லட்சத்து 5 ஆயிரத்து792க்கும் ஏலம் விடப்பட்டது. இந்து அறநிலையதுறை உதவி ஆணையர்ராமசாமி, ஆய்வாளர் வசந்தா, சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப் பாளர் பரமேஸ்வர பாண்டியன், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன்மற்றும் பலர் கலந்து கொண்டனர்.