உடுமலை; உடுமலை அருகே ஓனாக்கல்லுார் மதுரை வீரன் சுவாமி கோவிலில், 11ம்தேதி முதல் திருவிழா ஆரம்பமாகிறது.கோவிலில், கடந்த மே 29ம்தேதி நோன்பு சாட்டப்பட்டது. இதையடுத்து, வரும் 11ம்தேதி பொங்கல் விழாவுடன் திருவிழா துவங்குகிறது. தொடர்ந்து, 12ம்தேதி சக்தி கும்பம் அழைத்தல், 13ம்தேதி மதுரைவீரன் பொம்மியம்மாள் வெள்ளையம்மாள் திருக்கல்யாணம் நடக்கிறது. விழா நிறைவாக, 15ம்தேதி, மறு பூஜை நடக்கிறது.