பதிவு செய்த நாள்
12
ஜூன்
2018
11:06
ப.வேலூர்: ப.வேலூர், சுற்றுவட்டார பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், கபிலர்மலை சிவபுரீஸ்வரர், நன்செய் இடையாறு
திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஸ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வ நாதர், சக்திவிநாயகர் கோவிலிலுள்ள அண்ணாமலையார் உள்ளிட்ட கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. நந்திகேஸ்வரர் சிறப்பு அபிஷேக, அலங்காரத்தில் அருள்பாலி த்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது
* திருச்செங்கோடு, சுகுந்தகுந்தலாம்பிகை உடனமர் கைலாசநாதர் ஆலயத்தில், பிரதோஷ வழிபாடு, கைலாசநாதர் மற்றும் நந்திக்கு பால் அபிஷேகம் நடந்தது. பிரதோஷ அம்மனுக்கு சிறப்பு அலங்கார, ஆராதனை நடந்தது.