பதிவு செய்த நாள்
19
ஜன
2012
11:01
திருப்பூர் : நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட நாயனாருக்கு, திருப்பூரில் குருபூஜை விழா நேற்று நடந்தது. கொங்கு குலால சமுதாயப்பேரவை சார்பில் திருநீலகண்டபுரம், செல்வ விநாயகர் கோவிலில் திருநீலகண்ட நாயனார் குருபூஜை நடந்தது. பெண் பக்தர்கள் முத்து மாரியம்மன் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக தீர்த்தம் எடுத்து வந்தனர். விநாயகருக்கு புஷ்ப அலங்காரம் செய்து, அபிஷேகம் நடந்தது. திருநீலகண்ட நாயனார் உருவப்படம் வைத்து, அரளி, துளசி, செவ்வந்தி உள்ளிட்ட பலவகை பூக்களால் சிறப்பு அலங்கராம் செய்யப்பட்டது. உணவு பதார்த்தங் கள் படைத்து, திருநீலகண்ட நாயனாருக்கு குரு பூஜை நடந்தது. தொடர்ந்து, திருநீலகண்டரின் வாழ்க்கை வரலாறு பாராயணம் செய்யப்பட்டது; திரளான பக்தர்கள் பங்கேற்று, நாயனாரை வழிபட்டு, வரலாறு கேட்டனர். அடியார்களுக்கு காவி வேட்டி, துண்டு, திருவோடு வழங்கி, உணவு பரிமாறப்பட்டது; வேண்டுதல் நிறைவேறுவதற்காக, பெண்கள் அடியார்களிடம் மடியேந்தி, அன் னத்தை யாசகமாக பெற்றனர். மதியம் 1.00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. * குலால சமுதாய முன்னேற்ற சங்கம் சார்பில், கரட்டாங்காடு ஸ்ரீசித்தி விநாயகர், மாகாளியம்மன் கோவிலில் திருநீலகண்ட நாயனார் குருபூஜை விழா நடந்தது. விழாவை முன்னிட்டு, காலை 5.00 மணிக்கு விநாயகர், மாகாளியம்மன் கோவி லில் உள்ள திருநீலகண்ட நாயனாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. புஷ்ப அலங்காரத்தில் எழுத் தருளிய திருநீலகண்ட நாயனார், வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, அடியார்களுக்கு திருவோடு வழங்கி, அமுது யாசகம் அளிக்கப் பட்டது. பக்தர்கள் திரளாக பங்கேற்று, நாயனாரை வழிபட்டு, அவர் அருள்பெற்றனர்.