Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சக்தி விநாயகர் கோவிலில் அகண்ட தீபம் ... ஆதிசக்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் ஆதிசக்தி அம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி கோயில்களில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பரமக்குடி கோயில்களில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2018
12:06

பரமக்குடி:பரமக்குடி ஓட்டப்பாலம் நந்த கோபாலகிருஷ்ணர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பரமக்குடியில் சத்யபாமா ருக்மணி, நந்தகோபால கிருஷ்ணர்கோயில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக விழா ஜூன் 15 ல் காலை 9:00 மணிக்கு மகா சாந்தி ேஹாமத்துடன் துவங்கியது. அன்று மாலை 4:00 மணிக்கு சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் இருந்துபுனித தீர்த்த குடங்கள் புறப்பட்டு, ஊர்வலமாக கோயிலை அடைந்தது.தொடர்ந்து முதல்கால யாகபூஜைகளும், பூர்ணாகுதி நிறைவடைந்து, இரவு
அனைத்து சுவாமிகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. மறுநாள் யாகபூஜைகள் நடந்தது. நேற்று காலை 10:35க்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர், பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடந்தது. மதியம் அன்னதானமும், மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. விழாவில் முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா, மாநில யாதவர் சங்க தலைவர் கோபாலகிஷ்ணன் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை யாதவர் வர்த்தக சங்கம், நந்தகோபால கிருஷ்ணா அறக்கட்டளை தலைவர் ராமு, செயலாளர் கண்ணன், பொருளாளர் கோபிநாதன், துணைத் தலைவர் கனகராஜ், துணை செயலாளர் பாஸ்கரன், இணை செயலாளர் கார்மேகம், கவுரவதலைவர் கதிரேசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

* ராமநாதபுரம் அருகே பேராவூர் பராசக்தியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பராசக்தியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 15ல் யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது. மாலை 6:00 மணிக்கு மங்கள இசை, அனுக்ஞை, விக்னஷே்வர பூஜை, கணபதி ேஹாமம் இரவு 9:00 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை, அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நடந்தது. ஜூன் 16 ல் காலை 7:30 மணிக்கு கோ பூஜை, சூரிய நமஸ்காரம், மாலை மூன்றாம் கால வேத பராயணம், ேஹாமம் நடந்தது. ஜூன் 17 நேற்று காலை 6:00 மணிக்கு விஸ்வரூபம், கலா ஆவாஹனம், வேத பாராயணம், நாடி சந்தானம், தீபாராதனை, கடம் புறப்பாடு நடந்தது. காலை 9:30 மணிக்கு மேல் கோயில் கோபுரங்களில் புனி நீர் ஊற்றப்பட்டு அலங்காரம் தீபாராதனை, மூலவர் அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.

* கமுதி அருகே கோரைப்பள்ளத்தில் தோப்படிமுத்தையா சாமி, கருப்பண்ணசாமி ஆகிய கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. சங்கல்பம், விக்னேஸ்வர, புண்யாவாசனம், ஸ்ரீமகாகணபதி, லக்சுமி, சுதர்சன, நவக்கிரக, மிருத்தனேஹாமம், தீபாராதனை உட்பட ஆறு கால யாக பூஜைகள் நாராயணபட்டர், பாலாஜி சிவம் தலைமையில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடத்தபட்டு, கருட வாகன புறப்பாட்டுக்கு பின் கலசத்தில் கும்ப நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. பின் கோமாதா பூஜை நடத்தபட்டு, அன்னதானம் நடந்தது.

* கமுதி எட்டுக்கண் பாலம் அருகே சக்தி சாய்பாபா கோயில், அனுக்கிரக ஆஞ்ச நேயர், அங்காள பரமேஸ்வரி தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது .பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை இளங்கோ செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.பழநி கோயிலில் கோடை விடுமுறை நாளை ... மேலும்
 
temple news
சாயல்குடி; அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் வருகிற மே 29 வரை நீடிக்கிறது. சுட்டரிக்கும் கத்திரி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை மாதம் நான்காவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar