பதிவு செய்த நாள்
20
ஜன
2012
11:01
சேலம்: கருங்கல்பட்டி ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் பெருந்திருவிழாவில், திரளாக பக்தர்கள் அக்னி குண்டம் இறங்கி, தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தினர். சேலம், கருங்கல்பட்டி ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் தொட்டப்ப பெருந்திருவிழா, ஜனவரி 14 முதல் கொடி ஏற்றத்துடன் துவங்கி நடந்து வந்தது. இதில் முக்கிய திருவிழாவான அக்னி குண்டம் இறங்குதல், நேற்று நடந்தது. முன்னதாக, நேற்று காலை புண்யாக வசனத்துடன் பூக்குளி அமைக்கப்பட்டு, அக்னி வளர்க்கப்பட்டது. மாலையில், அக்னி குண்டம் இறங்கப்பட்டது. இதில் திரளாக பக்தர்கள் அக்னி குண்டம் இறங்கி, தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தினர். தொடர்ந்து, வேதோக்த மந்திர புஷ்பங்களுடன் மஹா தாளிகை நைவேத்ய அலங்கார பூசனை செய்ப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று காலை, ஆலய உற்சவ மூர்த்திகள் சப்பரத்தில் வசந்த உற்சவம் சக்தி, ஜோதி, பானக மெரவனைகள் கருங்கல்பட்டி முழுவதும் நகர் வலம் வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை, ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் பெருந்திருவிழா குழுவினர், தேவாங்க குல பெருமக்கள், வீரகுமாரர்கள் செய்திருந்தனர்.