பதிவு செய்த நாள்
20
ஜன
2012
11:01
திருநெல்வேலி : நெல்லையில் 40 ஆண்டுகளுக்கு பின் மாபெரும் நாம சங்கீர்த்தன பாகவத மேளா வரும் பிப்.17ம் தேதி முதல் 19ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. நெல்லை, தஞ்சாவூர், பெங்களூர், ஈரோடு, கடையநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பாகவத குழுவினரின் பஜனைகள் நடக்கிறது. நெல்லையில் 40 ஆண்டுகளுக்கு முன்பு மாபெரும் பாகவத மேளா நடக்கிறது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு பாகவத பஜனைகள் நடத்தப்பட்டாலும் பெரிய அளவில் பாகவத பஜனை மேளா நடத்தப்படவில்லை. நீண்ட இடைவெளிக்கு பின் மாபெரும் நாம சங்கீர்த்த பாகவத மேளா வரும் பிப்.17ம் தேதி நெல்லை ஜங்ஷன் சிருங்கேரி சாரதா கல்யாண மண்டபத்தில் துவங்குகிறது.
17ம் தேதி மாலை 3 மணி முதல் 5 மணி வரை பொன்னம்மாள், பிச்சம்மாள் குழுவினரின் தோடய மங்களம், குரு கீர்த்தனை நடக்கிறது. தொடர்ந்து பாகவதர்களின் குழுவினரின் நகர சங்கீர்த்தனம், ஆய்குடி குமார் பாகவதர் குழுவினரின் சாதுக்கள் நாம மகிமை நடக்கிறது. 18ம் தேதி காலையில் தஞ்சாவூர் தியாகராஜ பாகவதர் குழுவினரின் பஞ்சபதியும், மீனாட்சி மகாதேவன் குழுவினரின் நாம சங்கீர்த்தனம், மஞ்சப்புறா மோகன் பாகவதர் குழுவினரின் தியாகனம், பெங்களூர் ரகுமாயி பாண்டுரங்க பஜனை மண்டலி குழுவினரின் நாம சங்கீர்த்தனம், ஈரோடு ராஜாமணி பாகவதர் குழுவினரின் பூஜை, திவ்யநாமம், தீபப்பிரதட்சணம், டோலோஸ்தஸவம் நடக்கிறது. 19ம் தேதி காலையில் புதுக்கோட்டை நரசிம்ம பாகவதர் குழுவினரின் உஞ்சவிருத்தி, ராமானந்த சரஸ்வதி சுவாமிகளின் ராதா கல்யாண மஹோத்ஸவம், கடையநல்லூர் ராஜகோபால் பாகவத குழுவினரின் அபங்க திவ்யநாம சங்கீர்த்தனம், ஆஞ்சநேய உற்வசம் நடக்கிறது. இதுகுறித்து மேலும் விபரம் அறிய 94435-55738, 94429-08486, 94895-25058, 94436-70886 என்ற நம்பர்களில் தொடர்பு கொள்ளலாம். ஏற்பாடுகளை ராதாகிருஷ்ண பஜனை மண்டலியை சேர்ந்த பாஸ்கர வாத்யார், ஐஸ்வர்யா கணேஷ், ஐயப்பன், கண்ணன், பவானிகணேசன், குழந்தை நாராயணன், பொன்னப்ப ஐயங்கார் மற்றும் குழுவினர் செய்துள்ளனர்.