பண்ணைக்காடு, பண்ணைக்காடு காந்திபுரத்திலுள்ள மதுரைவீரன், பட்டாளம்மன், செல்விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தது. விழாவில் மூன்று நாள் யாகசாலை பூஜையில் தீர்த்தம் அழைத்தல், கணபதி ேஹாமம், மகா பூர்ணாகுதியுடன் புனித நீர்க்குட புறப்பாடுடன் கலசங்களுக்கு, பரிவார சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அபிஷேகே, ஆராதனை மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டது. முன்னதாக அன்னதானம் நடந்தது.