தேவிபட்டினம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே நகரமங்கலம் இருளாயி அம்மன், அக்னி வீரபத்திர சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை நடைபெற்றன. அதைத் தொடர்ந்து முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. யாகசாலையில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட புனிதநீர் கோயில் கோபுரத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.