பதிவு செய்த நாள்
26
ஜூன்
2018
01:06
எலச்சிபாளையம்: கோட்டபாளையம், சித்திவிநாயகர் கோவிலில், கும்பாபி?ஷகவிழா கோலாகலமாக நடந்தது. எலச்சிபாளையம் ஒன்றியம், பெரியமணலி கோட்டபாளையத்தில், மிகுந்த பொருட்செலவில், மகா மாரியம்மன் கோவில் வளாகத்தில், சித்தி விநாயகர் கோவில் கட்டப்பட்டுள்ளது. நேற்று அதன் கும்பாபி?ஷகம் நடந்தது. விழாவையொட்டி, கடந்த, 24 காலை, 8:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, காவிரி தீர்த்தம் கொண்டுவருதல், விநாயகர் பூஜை, வேதிகார்ச்சனை முதற்கால பூஜை, விநாயகர் சிலை பிரதிஷ்டை, தண்ணீர் ஊற்றுதல் நடந்தது. நேற்று காலை, 4:00 - 5:00 மணிக்கு, விநாயகர் பூஜை, இரண்டாம் கால யாகபூஜை, பூர்ணாகுதி தீபாராதனை, யாத்ராதானம், கடம் புறப்பாடு, 5.30மணிக்கு, விநாயகருக்கு தீர்த்தம் ஊற்றி, கும்பாபி?ஷகம் நடந்தது. 7:00 மணிக்கு அரசு, வேம்புவிற்கு திருமணம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.