பதிவு செய்த நாள்
26
ஜூன்
2018
01:06
திருப்பூர்:திருப்பூர், காங்கயம் ரோடு, என்.புதுப்பாளையம், ஸ்ரீ ராஜகணபதி மற்றும் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று கோலாகலமாக நடந்தது. கோவிலில், கும்பாபிஷேக விழா, கடந்த, 23ம் தேதி, யாகசாலை பூஜைகளுடன் துவங்கின. கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம் என நான்கு கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று அதிகாலை, நீரூற்று விநாயகர் மற்றும் ராஜகணபதி கோவில் கோபுரங்களுக்கும், தொடர்ந்து மூலவருக்கும், புனித நீர் அபிஷேகம் செய்விக்கப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தச தானம், தச தரிசனம், அன்னதானம் நடந்தது. அதே போல், ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 25ல் துவங்கியது. தினமும், காலை, மாலை நேரங்களில், வேத மந்திரங்கள் முழங்க யாக சாலை பூஜைகள் நடந்தன. காலை, 9:30க்கு, கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மண்டலாபிஷேகபூஜை இன்று துவங்கி, தொடர்ந்து, 48 நாட்களுக்கு தினமும், மாலை 6:30 மணிக்கு நடைபெறுவதாக, கோவில் கமிட்டியினர் தெரிவித்தனர்.