வெள்ளலுார்:போத்தனுாரை அடுத்த வெள்ளலுார் அருகே வெள்ளாளபாளையத்திலுள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேதர கோவிந்தராஜ பெருமாள் பண்டரி பஜனை கோவிலின், இரண்டாமாண்டு கும்பாபிஷேக நிறைவு விழா முன்னிட்டு, நேற்று காலை சுதர்சன ஹோமம் நடந்தது. தொடர்ந்து, 1,008 சகஸ்ர கலச அபிஷேகமும், மதியம் அன்னக்கூடை உற்சவமும் நடந்தது. இதனையொட்டி, ஸ்ரீதேவிபூதேவி சமேதர கோவிந்தராஜ பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளான பக்தர்கள், பெருமாளை வழிபட்டு சென்றனர்.