சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித்தேரோட்டம் நேற்று நடந்தது.சிவகங்கை தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலின் ஆனித்திருவிழா ஜூன் 18 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூன் 25 ம் தேதி இரவு மீனாட்சி சொக்கநாதருக்கு திருக்கல்யாணம் நடந்தது. 9ம் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. மாலை 4:30 மணிக்கு முதல் தேரில் மீனாட்சி சொக்கநாதரும், 2 வது தேரில் பிரியாவிடை அம்மனும் எழுந்தருளினர். 5:30 மணிக்கு தேர் புறப்பட்டது. வழிநெடுகிலும் பக்தர்கள் அர்ச்சனை செய்தும், சாலையில் தேங்காய் உடைத்தும் உற்சவமூர்த்திகளை வழிபட்டனர். நான்கு ரத வீதிகளில் பவனி வந்த தேர் 6:30 மணிக்கு நிலையை அடைந்தது. விழாவின் கடைசி நாளான இன்று பகல் 11:00 மணியளவில் தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது.