பதிவு செய்த நாள்
27
ஜூன்
2018
11:06
திண்டிவனம்: திண்டிவனத்தில் காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சிலைக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வசந்தபுரம் மல்லிகை தெருவில் உள்ள சந்திரமவுலீஸ்வர குருகுல வேத வித்யாலயா டிரஸ்ட் இடத்தில், காஞ்சி காமகோடி பீடத்தின் 68 வது பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு கல் விக்ரக சிலை அமைக்கப்பட்டு நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கடந்த பிப்.,26 ம் தேதி, சுவாமிகளின் ஐந்து கோடி நாமாக்கள் சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு மேல், மயிலம் பொம்மபுரம் ஆதினம் சிவஞான பாலயசுவாமிகள், சீனுவாச அய்யர் குடும்பத்தினர் முன்னிலையில் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சிலைக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில், திண்டிவனம் பிராமணர் சங்க கவுரவ தலைவர் மூத்த வழக்கறிஞர் சங்கரன், பி.ஆர்.எஸ். துணிக்கடை உரிமையாளர் ரங்கமன்னார், ராம்டெக்ஸ் வெங்கடேசன், சந்திரமவுலீஸ்வர குருகுல வேத வித்யாலயா டிரஸ்ட் முதல்வர் மணிகண்ட சாஸ்திரிகள், திண்டிவனம் புரோகிதர் சங்க துணைத்தலைவர் சீனுவாச அய்யர் மற்றும் வேதபாடசாலை நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.