கி.ராயபுரம்: லாலாப்பேட்டை கடைவீதி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் நேற்று நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை கடைவீதியில், மாரியம்மன் கோவில் உள்ளது. இக் கோவில் திருவிழா முன்னிட்டு, நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, திருத்தேரில் வைத்து, முக்கிய வீதிகள் வழியாக, தேரோட்டம் நடந்தது. விழாவில், லாலாப்பேட்டை சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.