கீழக்கரை, மாயாகுளம் அருகே தச்சன் ஊரணி செங்காட்டு உடைய அய்யனார் கோயிலில் உலக நன்மைக்காக 508 விளக்கு பூஜை நடந்தது. மூலவர் பூரண, புஷ்கலா தேவி சமேத அய்யனாருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மாலை 6 மணியளவில் கோயில் வளாகத்தில் விளக்கு பூஜை, சக்தி ஸ்தோத்திரம் உள்ளிட்டவைகள் நடந்தது. பூஜைகளை கீழக்கரை மாசாணம் அம்மாள், கணேசன், குருசக்தி ஆகியோர் நடத்தினர். ஏற்பாடுகளை மாதாந்திர வழிபாட்டுக்குழுவினர் செய்திருந்தனர்.