கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அருகே, மழை வேண்டி, ஒப்பாரி வைத்து, பெண்கள் வழிபாடு நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த, பெரிய அய்யம்பாளையத்தில், வறட்சியால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்குள்ள சின்ன ஏரியில், நேற்று, மழை வேண்டி, பொங்கல் வைத்து, களி, கருவாட்டு குழம்பு, வைத்து படையிலிட்டு, ஒப்பாரி வைத்து, பெண்கள் வழிபட்டனர். பின், களி, கருவாட்டு குழம்பு, பிரசாதமாக வழங்கப்பட்டது.