கரூர்: கோடீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் நேற்று நடந்தன. கரூர், அமராவதி ஆற்றங்கரையோரம் ஐந்து ரோட்டிலுள்ள கோடீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. கடந்த ஜூன், 28ல், கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. ஆறு கால யாக சாலை பூஜையில், முதல் கால யாக சாலை பூஜை நேற்று முன்தினம் காலை நடந்தது. நேற்று காலை, இரண்டாம் கால யாக சாலை பூஜை துவங்கியது. மூலிகை திரவிய பொருட்களைப் பயன்படுத்தி, இரண்டு மணி நேரம் நடந்த இப்பூஜையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பின் மாலை, 5:00 மணியளவில், மூன்றாம் கால யாக சாலை பூஜை நடந்தது. மற்ற பூஜைகள் இன்று நடக்கின்றன. நாளை காலை, 9:30 மணிக்கு கோவில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.