பதிவு செய்த நாள்
02
ஜூலை
2018
12:07
சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை, கன்னிகா பரமேஸ்வரி அம்மன் மற்றும் சொர்ண மகாமேரு கும்பாபி?ஷக விழா, கடந்த, 28ல், முதல் கால யாக பூஜையுடன் தொடங்கியது. 29, 30ல், இரண்டு, மூன்று, நான்கு, ஐந்தாம் கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை, 6:45 மணிக்கு, ஆறாம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து, 10:15 மணிக்கு, அம்மன் பிரதான கோபுரம், சால கோபுரம், ராஜ கோபுரங்களுக்கு, கும்பாபி?ஷகம் நடந்தது. சென்னை, பிரம்மஸ்ரீ விஜயபானு கனபாடிகள் குழுவினர், கலசம் மீது புனிதநீரூற்றி, கும்பாபி?ஷகத்தை நடத்தி வைத்தனர். அப்போது, கோபுரத்தின் நேரெதிரே வானத்தில், கருடன் பறந்து சென்றதை பார்த்து, திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என, பக்தி முழக்கமிட்டனர். தொடர்ந்து, கன்னிகா பரமேஸ்வரி அம்மன், பரிவார தெய்வங்களுக்கு, கும்பாபி?ஷக வைபவம் நடந்தது.