மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா
பதிவு செய்த நாள்
02
ஜூலை 2018 11:07
திருப்பூர்:திருப்பூர் வாவிபாளையம், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.திருப்பூர் மாநகராட்சி, வாவிபாளையத்தில் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம், கடந்த, 28ம் தேதி துவங்கியது. திருமூர்த்தி மலையில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல், முளைப்பாளிகை, பெருஞ்சலங்கை ஆட்டம், யாகசாலை பூஜைகள் ஆகியவை நடந்தன. நேற்று காலை, விக்னேஷ்வர பூஜை, நான்காம் கால யாக பூஜை, சுவாமிகளுக்கு காப்பு கட்டுதல், நாடி சந்தானம், தீபாராதனை நடந்தன. பின், கலசங்கள் புறப்பாடு, கோபுரம் கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், கோ பூஜையை தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.கும்பாபிஷேகத்தை பெருமாநல்லுார் ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை உடனமர், ஸ்ரீ உத்தமலிங்கேஸ்வரர் கோவில், உத்தமலிங்கேஸ்வர சிவம் நடத்தி வைத்தார். இதில், சுற்றுப்புற பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர்.
|