பட்டிவீரன்பட்டி: அய்யம்பாளையம் காந்தி குன்றம் அருள்முருகன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.ஜூன் 29ல் முதல் நாள் யாகபூஜை விநாயகர் பூஜையுடன் துவங்கியது. யந்திர பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது. 2ம் நாள் கணபதி ேஹாமம், வருணபூஜை, தீப ஆராதனை, காப்பு கட்டுதல் நடந்தது. நேற்று திருப்பள்ளி எழுச்சியுடன் கோ, விநாயகர் பூஜைகள் நடந்தன. காலை 7:45 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.திருநாவுக்கரசு குருக்கள் தலைமையில் குழுவினர் நடத்தினர். சித்பவாநந்த ஆசிரம பீடாதிபதி ஓங்காரநந்தா, காமாட்சி புரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வரர் அருளாசி வழங்கினர். ஆன்மிக சொற்பொழிவை நாராயணன் வழங்கினார். ஏற்பாடுகளை நிர்வாகக் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.