பதிவு செய்த நாள்
03
ஜூலை
2018
12:07
பண்ணைக்காடு:பண்ணைக்காடு மாயழகர் கோயில் கும்பாபிேஷக நடந்தது. மூன்று நாள் யாகசாலை பூஜையில் ஆச்சார்யர் அழைப்பு, யஜ்மான அனுக்கை, வாஸ்துசாந்தி, கும்ப, பூஜை, வேத பாராயணங்கள், கோ பூஜை, திருவாராதனம், சாற்றுமுறை, அங்க ஹோமம், சயணாதி வாசம், மாத்ராதானம், கும்பப்ரதஹினம்கடம் புறப்பட்டு கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
*பண்ணைக்காடு செல்விநாயகர், வீரியகாரி அம்மன், எம் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி கோயில் கும்பாபிேஷக விழா நடந்தது. மூன்று கால யாகசாலை பூஜையில் குறை அனுமதி பெறுதல், சேனை நாயகர் வழிபாடு, மஹாசங்கல்பம், வாஸ்து பூஜை, காப்பு கட்டுதல், த்வாரா, தோரண கும்ப, ஸ்ரீசக்ரராப்தா மண்டல பூஜைகள், கோலமிகு கோவிந்தனுக்குகோபுரக் கலசம் வைத்தல், யாத்ரா தானம் கலசம் புறப்பட்டு வீரியகாரி அம்மன் மற்றும் பரிவார செய்தவ கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர், ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர். அன்னதானம் நடந்தது.