நமது வீட்டில் குழந்தைகள் பிடிவாதம் செய்தால் அவர்களை சமாதானப்படுத்த பொம்மை வாங்கித் தருவதாகவும், சாக்லெட் வாங்கித் தருவதாகவும் சமாதானம் செய்வோம். அப்படி ஏதேனும்வாக்கு கொடுத்தால், அதை கண்டிப்பாக வாங்கிக் கொடுத்து விட வேண்டும் என்கிறார் நபிகள் நாயகம். விளையாட்டுக்கு கூட பொய் சொல்லக் கூடாது என்பது அவரது கொள்கை. ஒருமுறைஅமீர் என்பவரின் தாய் “மகனே, இங்கே வா, உனக்கு சாப்பிட பண்டம் தருகிறேன்”என்றார். இதைக் கேட்ட நாயகம் அந்த அம்மையாரிடம் “உங்கள் மகனுக்கு என்ன கொடுக்கப் போகிறீர்கள்?”எனக் கேட்டார். “நாயகம் அவர்களே! நான் சில பேரீச்சம்பழங்கள் கொடுக்கப் போகிறேன்” என்றார் அந்த தாய். “அம்மா! நீங்கள் அமீருக்கு கொடுப்பதாக சொன்னதை நிச்சயமாக கொடுத்து விடுங்கள். அவ்வாறு கொடுக்காவிட்டால் உங்களது கணக்கில் ஒரு பொய் எழுதப்பட்டு விடும்“ என்றார்.