கோவில்பட்டி : கோவில்பட்டி சங்கரேஸ்வரி புற்றுக்கோயிலில் பிரதோஷ விழா சிறப்பு பூஜைகள் நடந்தது. கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயிலில் சுக்ரபிரதோஷ விழா சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி காலையில் கணபதி பூஜையுடன் பிரதோஷ சிறப்பு பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து புண்ணியாவாஜனம், பஞ்சசுத்தஜெபம், வேதபாராயணம், ருத்ரஜெபம், கும்பகலவபூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. மேலும் சங்கரலிங்கசுவாமி, நந்தியம்பெருமானுக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. சிறப்பு பூஜைகளை சுப்பிரமணியய்யர் செய்தார். விழாவில் கோயில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள், சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நெய்தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தேவகி, ரவிநாராயணன், பாலாஜி, லிங்கையா, வேல்சாமி ஆகியோர் செய்திருந்தனர்.