பதிவு செய்த நாள்
23
ஜன
2012
12:01
அரியலூர்: அரியலூர் ஸ்ரீ காளியம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நவசண்டி ஹோமம் நடந்தது.அரியலூர் ஸ்ரீ காளியம்மன் கோயிவிலில் தை அமாவாசையை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கிய நவசண்டி ஹோமம் நேற்று மாலை வரை நடந்தது.அவரவர் ஜாதகப்படி ஏற்படும் ஏழரை சனி, அஷ்டம சனி, செவ்வாய் தோஷம், ராகு, கேது கிரகங்களால் ஏற்படும் தோஷம், காலசர்ப்ப தோஷம், நாகதோஷம், குழந்தைகளுக்கு ஏற்படும் பாலாரிஷ்டம் உள்ளிட்ட தோஷங்கள் நிவர்த்தி அடையவும், எதிரிகளால் ஏற்படுத்தப்படும் மாந்திரீகம், ஏவல், பில்லி சூனியம் போன்ற பெரும் பகைகள் விலகிடவும், தீய ஆவிகளின் சேஷ்டைகள் நீங்கிடவும், வம்பு வழக்குகளிலிருந்து விடுபடவும், திருமண தடை நீங்கிடவும், வாணிப வளம் பெருகிடவும், நாடும் நகரங்களில் துர்பிக்ஷம் நீங்கி சுபிக்ஷம் பெருகிடவும் வேண்டி, அரியலூர் விளாங்கார தெரு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் நடத்தப்பட்ட இந்த நவசண்டி ஹோமத்தை, அரியலூர் அண்ணாநகரை சேர்ந்த செல்வ முத்துகுமர சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் நடத்தினர்.நவசண்டி ஹோமத்தில் அரியலூர் நகரைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பல்வேறு ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் பலரும் பங்கேற்றனர். பக்தர்கள் அனைவருக்கும் வக்கீல் முருகன் தலைமையிலான விழா குழுவினர் பிரசாதம் வழங்கினர்.