காரமடை:குருந்தமலையில் குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. ஆனி மாத கிருத்திகை மற்றும் காரமடை வட்டார திருமுருக பக்தர்கள் பேரவை, 16ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, பேரவை சார்பில் கோவிலுக்கு பக்தர்கள் மலர் காவடி எடுத்து வந்தனர். கே.புங்கம்பாளையம் செல்வ விநாயகர் கோவிலில், 50 மலர் காவடிகளை வைத்து பூஜை செய்தனர். ஊர் கவுடர் ஜெயபாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். அனைவரும் மலர் காவடிகளை எடுத்துக் கொண்டு, குருந்தமலை வரை முருக பக்தி பாடல்களை பாடி வந்தனர். மலையில் கிரிவலம் வந்த பின், கோவிலுக்கு மலர் காவடிகளை எடுத்துச் சென்றனர்.உற்சவர் குழந்தைவேலாயுத சுவாமிக்கு மலர்களால் அபிேஷகம் செய்தனர். சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மதியம், மருதுார் ஊராட்சி முன்னாள் தலைவர் ரங்கராஜன், அன்னதானத்தை துவக்கி வைத்தார்.