பதிவு செய்த நாள்
10
ஜூலை
2018
12:07
பழநி, ஆனி மாத கார்த்திகையை முன்னிட்டு, பழநி மலைக்கோயிலில் திருஆவினன்குடி, பெரியநாயகியம்மன் கோயில்களில் சிறப்பு அபிேஷக வழிபாடு நடந்தது. கார்த்திகையை முன்னிட்டு, மூன்றாம்படைவீடு திருஆவினன்குடி கோயிலில் மூலவர் குழந்தைவேலாயுதசுவாமி, சனிபகவான், மகாலட்சுமி, அக்னி, காமதேனு, சூரியன், பூமாதேவி ஆகியோருக்குஅபிஷேகம் செய்து,வெள்ளிக்கவசத்தில்தீபாராதனை நடந்தது. பெரியநாயகியம்மன்கோயிலில் சோமாஸ்கந்தர், வள்ளி, தெய்வானை அபிேஷகம், வெள்ளி மயில்வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் ரதவீதியில் உலா வந்தனர். மலைக்கோயிலில் முருகருக்கு அபிஷேக, சிறப்புபூஜை நடந்தது. திருமுருகபக்தசபா சார்பில், பக்திசொற்பொழிவு, பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தது. மாலையில் 108 திருவிளக்கு பூஜையும், அதில் பெண்களுக்கு தாலிக்கயிறு, குங்குமம் பிரசாதமாக வழங்கபட்டது.