Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) எதிர்பாராத வருமானம் மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ... ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) நன்மை ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ...
முதல் பக்கம் » மாசி ராசிபலன் (13.2.2019 முதல் 14.3.2019 வரை)
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) குதூகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2018
15:53

தர்மவழியில் வாழ்வு நடத்தும் மேஷ ராசி அன்பர்களே!

இந்த மாதம் குருபகவான் முன்னேற்றத்தை கொடுப்பார். சுக்கிரன் ஆக. 2 வரை நன்மை தர காத்திருக்கிறார். அதன் பின் கன்னி  ராசிக்கு மாறுவதால் அவரால் நற்பலன் கொடுக்க
முடியாது. உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் இருக்கும் புதன் பொருளாதார வளத்தை மேம்படுத்துவார். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கச் செய்வார். சுக்கிரனால் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். லாபம் அதிகரிக்கும். மனதில் பக்தி எண்ணம் மேம்படும்.  ஆக. 2 க்கு பிறகு அவரால் முயற்சியில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படலாம். குரு பகவான் துலாம் ராசியில் இருந்து நன்மைகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்.  குறிப்பாக குடும்பத்தில் மகிழ்ச்சி, குதூகலம், நல்ல பணப் புழக்கத்தைத் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

குடும்பத்தில் சுபவிஷய பேச்சு சிறப்பாக நடந்தேறும். கணவன், மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும். ஜூலை 30,31 ல் உறவினர் வருகையும் அவர்களால்
நன்மையும் கிடைக்கும். ஆனால் ஆக. 10,11ல் அவர்கள் வகையில் மனக்கசப்பு வர வாய்ப்பு உண்டு. எனவே அப்போது அனாவசிய பேச்சை தவிர்த்து ஒதுங்கி இருக்கவும். ஆக. 3,4,5 ல் பெண்கள் உதவிகரமாக செயல்படுவர். ஆக. 8,9 ல் புத்தாடை அணிகலன்கள் வாங்க யோகமுண்டு. பணியாளர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவால் பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். விரும்பிய இடத்துக்கு பணிமாற்றம் பெறலாம். குரு, சுக்கிரன் சாதகமான இடத்தில் இருப்பதால் பின்தங்கிய நிலை மறையும். தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும். ஜூலை 27,28,29 ஆகிய நாட்களில் எதிர்பார்ப்பு நிறைவேறும்.  உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். தொழில், வியாபாரத்தில் கடின உழைப்பு தேவைப்படும். அதற்கேற்ற வருமானமும் கிடைக்கும். பெண்கள்  வகையில் விரோதம் ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.  ஆக. 1,2,6,7 ல் சந்திரனால் தடைகள் வரலாம். பண விரயம் ஆகலாம். மதிப்பு, மரியாதை எதிர்பார்த்தபடி இருக்காது. ஜூலை 18,19, ஆக. 14,15 ல் எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.  

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைக்கும். பொருளாதார வளம் சிறக்கும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். ஆக.2 க்கு பிறகு கலைஞர் சுமாரான நிலையில் இருப்பர். முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். நற்பெயர், புகழுக்கு பங்கம் வராது. புதிய ஒப்பந்தம் அதிக சிரத்தை எடுத்தால் மட்டுமே கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.    

மாணவர்கள் சிறப்பான நிலையை காணலாம். ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும்.  போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். மஞ்சள் நிற தானியம் பயிரிடவும். பெண்கள் சகோதரவழியில் நன்மை காண்பர். தோழிகள் மிக ஆதரவுடன் இருப்பர். சுபவிஷயங்கள் குறித்து பேசி மகிழ்வீர்கள்.  குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். அக்கம்பக்கத்தினர் அனுசரணையுடன் செயல்படுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பானபலன் பெறுவர். மாத பிற்பகுதியில் பிள்ளைகளால் பிரச்னை வரலாம். எனவே அவர்கள் நடத்தையிலும் நடவடிக்கையிலும் சற்று கவனம் தேவை.

* நல்ல நாள்: ஜூலை 18,19, 20,21,27, 28,29,30,31, ஆக. 3,4,5,8,9,14,15,16
* கவன நாள்: ஜூலை 22,23,24 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 2,3
* நிறம்: மஞ்சள், பச்சை

பரிகாரம்:
● வெள்ளியன்று ராகுகாலத்தில் துர்க்கை வழிபாடு
● செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம்
● ஏகாதசியன்று பெருமாளுக்கு துளசி அர்ச்சனை

 
மேலும் மாசி ராசிபலன் (13.2.2019 முதல் 14.3.2019 வரை) »
temple
சிந்தித்து செயலாற்றி வரும் மேஷ ராசி அன்பர்களே!

சுக்கிரன் பிப்.25வரை சாதகமான நிலையில் உள்ளார் ... மேலும்
 
temple
ஊக்கத்துடன் முயற்சியில் ஈடுபடும் ரிஷப ராசி அன்பர்களே!

சூரியனும், புதனும் 10-ம் இடத்தில் ... மேலும்
 
temple
அனைவரிடமும் நட்பு பாராட்டும் மிதுன ராசி அன்பர்களே!

செவ்வாய் இந்த மாதம் சாதகமான இடத்தில் இருந்து ... மேலும்
 
temple
கடமையில் கண்ணாக இருக்கும் கடக ராசி நேயர்களே!

புதன்,சனி, குரு மாதம் முழுவதும் நற்பலன் தருவர். ... மேலும்
 
temple
சிந்தனையால் உயர்ந்து நிற்கும் சிம்ம ராசி நேயர்களே!

சுக்கிரன் பிப்.25 வரை நன்மை தருவார். அவரால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.