நெட்டப்பாக்கம்: கல்மண்டபம் அய்யனாரப்பன் கோவிலில் பூரணி அய்யனாரப்பன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நெட்டப்பாக்கம் அடுத்த கல்மண்டபம் கிராமத்தில் உள்ள விநாயகர், முத்துமாரியம்மன், அய்யனார், நாகமுத்தாலம்மன், மழுவேந்தியம்மன் கோவில் செடல் உற்சவ விழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் அய்யனாரப்பன் ஆலயத்தில் காலை 9:௦௦ மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பகல் 2.௦௦ மணிக்கு ஊரணி பொங்கல் வைத்து, மாலை 6.௦௦ மணிக்கு பூரணி அய்யனாரப்பன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இரவு 7.௦௦ மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. வரும் 20ம் தேதி மதியம் 12.30 மணிக்கு செடல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி புகழேந்தி மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் செய்துள்ளனர்.