பதிவு செய்த நாள்
18
ஜூலை
2018
12:07
காஞ்சிபுரம்: ஆடி மாத அம்மன் விழாக்களுக்காக, கோவில் வளாகப் பகுதிகள் சீரமைக்கப்படுகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற பல அம்மன் கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும், கிராமத் தேவதைகளாக, எல்லையம்மன், முத்துமாரியம்மன், செங்கழனியம்மன், வேம்புலியம்மன் என்ற பெயர்களில், கோவில்கள் உள்ளன. ஆடி மாதம் துவங்கியுள்ளதை தொடர்ந்து, ஆடிப் பெருவிழா நடக்கவுள்ளது. இதை ஒட்டி திருப்போரூர், திருக்கழுக்குன்றம் வட்டங்களில் உள்ள, 200க்கும் மேற்பட்ட கிராம அம்மன் கோவில் விழாக்களில், ஊரணி பொங்கல் இடுதல், கூழ்வார்த்தல், பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட விழாக்கள் நடைபெறவுள்ளன. இதற்காக, கோவில் வளாகத்தில் சீரமைத்தல், சுவருக்குச் சுண்ணாம்பு அடித்தல், முட்செடி அகற்றுதல், பூஜைப் பொருட்களைத் துாய்மைப்படுத்தல், ஒலிப் பெருக்கி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. - - நமது நிருபர் -