ராமநாதபுரம், ராமநாதபுரம் பகுதியில் ஆடி பிறப்பை முன்னிட்டு அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். ராமநாதபுரம் ரயில் நிலையம் அருகில் உள்ள வெட்டுடைய காளியம்மன், அல்லிக்கண்மாய் மாரியம்மன் கோயில, கேணிக்கரை முத்தாலம்மன் கோயில், ஓம் சக்திநகர் ஒத்தப்பனை காளியம்மன் கோயில், சாயக்காரத்தெரு முத்துமாரியம்மன் கோயில், தையல்காரத்தெரு மஞ்சன மாரியம்மன் கோயில், தாயுமானசுவாமி கோயில் தெரு மந்தை மாரியம்மன் உட்பட அம்மன் கோயில்களில் ஆடிமாத பிறப்பு தினமான நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரம் நடந்தது. சிறப்பு பூஜைகளில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.