பதிவு செய்த நாள்
20
ஜூலை
2018
12:07
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடி பிரமோறஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு அனுக்ஞை, வாஸ்து சாந்தியுடன் துவங்கியது. நேற்று காலை 9:00 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஆடி வீதியில் வந்து கொடி மரத்தை அடைந்தார். தொடர்ந்து கொடி மரத்தில் கருட கொடியை அர்ச்சகர்கள் ஏற்றி வைத்தனர். பின்னர் அபிேஷகம், தீபாராதனை நிறைவடைந்து பிரசாதம் வழங்கப்பட்டன. மாலை பெருமாள் மோகினி அவதாரத்தில் அன்ன வாகனத்தில் வீதிவலம் வந்தார். இதே போல் தினமும் காலை, மாலை பெருமாள் சிம்ம, சேஷ, கருட, அனுமன் வாகனத்திலும், ஜூலை 24 ல் இரவு 7:00 மணிக்குபெருமாள், ஆண்டாள் மாலை மாற்றும் வைபவம் நடக்கும். மறுநாள் நவநீதகிருஷ்ண சேவை, குதிரை வாகனத்தில் வலம் வரும் பெருமாள், ஜூலை 27 ல் காலை 9:30 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெறவுள்ளது.