ராமநாதபுரம்:சென்னை தியாகராஜ நகர் ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பில் தமிழகம் முழுவதும் வலம் வரும் சக்தி ரதம் நேற்று ராமநாதபுரம் வந்தது. அரண்மனை சந்திப்பில் அம்மன் சிலைக்கு தீபாராதனை நடந்தது. கிராம கோயில் பூஜாரிகள் பேரவை மற்றும் ராமநாதபுரம் இந்து வித்யாலயா மழலையர் மெட்ரிக் பள்ளி செயலர் சிங்காரவேல், முதல்வர் சாந்தி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கிராம கோயில் பூஜாரிகள் பேரவை மண்டல அமைப்பாளர் கோதாவரி கூறுகையில், ஜூலை 4ல் ராமேஸ்வரத்தில் இருந்து ரதம் புறப்பட்டது. மாவட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கு சென்றது. ஜூலை 18 ல் போகலுார் ஒன்றியம் முதலுார், துத்தியேந்தல், 19ல் பேராவூர், செவ்வூர் சென்றது. இன்று ராமநாதபுரம் வந்துள்ளது.