பதிவு செய்த நாள்
25
ஜன
2012
12:01
குலசேகரம்:குலசேகரம் பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோயில் விழாவில் மகாகும்பாபிஷேகம் வரும் 30ம் தேதி நடக்கிறது.குமரி மாவட்டத்தில் மகாசிவராத்திரி அன்று பக்தர்கள் ஓடிசென்று வழிபடும் கோயில்களில் 5வது கோயில் என்ற சிறப்பை பெற்றது பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோயில். பண்டை காலத்தில் பொன்மனை சுற்றுவட்டார பகுதியில் வாழ்ந்து வந்த "தீம்பி என்ற மலைவாழ் மக்கள் இக்கோயிலில் வழிபட்டு வந்துள்ளனர். இதனால் இக்கோயில் தீம்பிலான்குடி மகாதேவர் கோயில் என்ற பெயர் பெற்றது.நீண்ட காலத்திற்கு பிறகு இக்கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் துவங்கி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்தது. தேவசம்போர்டு மற்றும் கோயில் கமிட்டியினர் இணைந்து பல லட்சம் ரூபாய் மதிப்பில் கும்பாபிஷேக திருப்பணிகள் செய்யப்பட்டன. இக்கோயில் கும்பாபிஷேக விழா இன்று துவங்குகிறது. வரும் 30ம் தேதி மகாகும்பாபிஷேகம் நடக்கிறது.விழா துவக்க நாளான இன்று(25ம் தேதி) காலை தீபாராதனை, ஆசாரிய வரணம், பிரசாத சுத்தி, அங்குராரோபணம், அஸ்திர கலசபூஜை, ராஹோஷ்ண ஹோமம், வாஸ்துபலி, வாஸ்து கலசாபிஷேகம், வாஸ்து புண்ணியாகம், அத்தாழ பூஜை நடக்கிறது. இரண்டாம் நாளான நாளை(26ம் தேதி) காலை நிர்மால்ய தரிசனம், கணபதிஹோமம், உஷபூஜை, முளபூஜை, சதுர்சுத்தி, தாரை, பஞ்சகவ்யம், கலசபூஜை, உச்சபூஜை, பிறோக்த ஹோமம், பிராயச்சித்த ஹோமம், ஹோம கலசாபிஷேகம், பந்திருநாழி, மதியம் அன்னதானம், மாலை தீபாராதனை, பகவதிசேவை, அத்தாழபூஜை, ஸ்தலசுத்தி, திருவிளக்கு பூஜை, இரவு திருவட்டார் ஒன்றிய தர்மரக்ஷண சமிதி சார்பில் குடும்ப ஐஸ்வரிய பூஜை நடக்கிறது.மூன்றாம் நாள்(27ம் தேதி) காலை நிர்மால்ய தரிசனம், கணபதிஹோமம், உஷபூஜை, சாந்திஹோமம், அற்புத சாந்திஹோமம், முளபூஜை, ஹோம கலசாபிஷேகம், உச்சபூஜை, மதியம் அன்னதானம், மாலை தீபாராதனை, பகவதிசேவை, உபதேவதைகளுக்கு சுத்திகிரியைகள், ஸ்தலசுத்தி, அத்தாழ பூஜை, திருவிளக்கு பூஜை, குடும்ப ஐஸ்வரிய பூஜை நடக்கிறது.நான்காம் நாள்(28ம் தேதி) காலை நிர்மால்ய பூஜை, கணபதிஹோமம், உஷபூஜை, சாந்திஹோமம், சோரசாந்தி ஹோமம், ஹோம கலசாபிஷேகம், முளபூஜை, உச்சபூஜை, மதியம் அன்னதானம், மாலை தீபாராதனை, முளபூஜை, பகவதிசேவை, ஸ்தலசுத்தி, அத்தாழபூஜை, திருவிளக்கு பூஜை, பஜனை நடக்கிறது.ஐந்தாம் நாள்(29ம் தேதி) காலை நிர்மால்ய தரிசனம், கணபதிஹோமம், உஷபூஜை, தத்துவ ஹோமம், குண்டத்தில் அக்னி ஜனனம், தத்துவ ஹோமம், முளபூஜை, பிரம்ம கலசபூஜை, தத்துவ கலசாபிஷேகம், உச்சபூஜை, மதியம் அன்னதானம், மாலை பரிகலச பூஜை, தீபாராதனை, முள எழுந்தருளல், அதிவாச ஹோமம், கலசாதிவாசம், அத்தாழ பூஜை, பிரார்த்தனை, திருவிளக்கு பூஜை, இரவு அன்னதானம், கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.ஆறாம் நாள்(30ம் தேதி) காலை நிர்மால்ய தரிசனம், கணபதிஹோமம், உஷபூஜை, அதிவாசத்திங்கல் உஷபூஜை, பரிகலசாபிஷேகம், மரப்பாணி, கலசாலங்கார பிரதிக்ஷணம், தானம், முகூர்த்தம், 9.45ல் இருந்து பகல் 11க்குள் மகாகும்பாபிஷேகம், உபதேவதைகளுக்கு பிரதிஷ்டை, மகாநிவேத்தியம், சர்வாலங்கார பூஜை, தீபாராதனை, படித்தரம் நிச்சயிக்கல், ஸ்ரீபூதபலி, தட்ச்சணை, அன்னதானம் நடக்கிறது.ஏற்பாடுகளை கும்பாபிஷேக குழு தலைவர் ரமேஷ்பிரசாத், செயலாளர் நாராயணன் நாயர், பொருளாளர் சசீதரன் நாயர், பொதுக்குழு உறுப்பினர் ஐயப்பன் தலைமையில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.