பதிவு செய்த நாள்
25
ஜன
2012
12:01
கரூர்: கரூர் வஞ்சியம்மன் கோவில் தெரு மவுன குரு ஜீவசித்தர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 29ம் தேதி நடக்கிறது. தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற, நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மவுன குரு சித்தர் கோவில் 30 லட்ச ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. பதினெட்டு சித்தர்கள் திருவுருவுடன் கோபுரம் எழுப்பபட்டு, வரும் 29ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி கடந்த 19ம் தேதி முகூர்த்த கால் நடும் விழா சிறப்பாக நடந்தது. நிகழ்ச்சியில் முரளி சிவாச்சாரியார், ஸ்தபதி கருப்பையா, திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன், கொங்கு மாரிமுத்து, வடிவேல் பிள்ளை, குழந்தைவேல், பொன் ராஜசேகர், சிவகுமார், முனுசாமி, ராம்குமார், பாலமுருகன், சண்முகம், முத்துகுமார் உள்பட திருப்பணி குழுவினர் பங்கேற்றனர்.