பதிவு செய்த நாள்
24
ஜூலை
2018
12:07
கொடுமுடி: சிவகிரி மடாலயத்தில், அபூர்வ திரிசங்கு மூலம் தீர்த்தம் எடுத்து, பூஜை செய்யப்படுகிறது. ஈரோடு மாவட்டம் சிவகிரியில், மடாலயம் உள்ளது. இங்கு மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில், அபூர்வ திரிசங்கு, பூஜைக்காக பயன்படுத்தப்படுகிறது. இதனால் பூஜை செய்வது சிறப்பம்சமாகும்.
இதுகுறித்து சிவகிரி ஆதீனம் சிவசமய பண்டித குரு சுவாமிகள் கூறியதாவது: ஏறக்குறைய, 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த திரிசங்கு மூலம் தீர்த்தம் எடுத்து, மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. சங்குகளில் பல்வேறு வகைகள் உள்ளன. பெரும்பாலும் இடம்புரி, வலம்புரி சங்குகளை பலர் அறிந்திருப்பர். ஆனால், திரிசங்கு, மடிகாம்பு சங்கு, நாதசங்குகளும் உள்ளன. இதில் திரிசங்கு, அபூர்வமானதாக கூறப்படுகிறது. ஒரு சங்கில், அடுத்தடுத்து, மூன்று அடுக்குகளை கொண்டிருக்கும். இச்சா, கிரியா, ஞானம் என மூன்று சக்திகளை இச்சங்கு, உள்ளடக்கியதாக கருதப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.