பதிவு செய்த நாள்
24
ஜூலை
2018
01:07
திருப்பாச்சூர்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருப்பாச்சூரில் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.வரும் செப்டம்பர் மாதம், 13ம் தேதி, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அதற்காக சிலைகள் தயாரிக்கும் பணி, இப்போதே துவங்கி தீவிரமாக நடந்து வருகிறது.திருவள்ளூர் அடுத்த, திருப்பாச்சூர் பகுதியில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இங்கு, 3 - 10 அடி உயரம் வரை சிலைகள் தயாரித்து வருகின்றனர்.இந்த சிலைகள் நீர் நிலைகளுக்கு மாசு ஏற்படாத வகையில், கிழங்கு மாவு, தேங்காய் நார் மற்றும் காகித கரைசல் மூலம் தயாரித்து வருகின்றனர். சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள டி.தேஜா கூறியதாவது:எளிதில் நீரில் கரையும் வகையில், சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், தற்போது செய்துள்ள விநாயகர் சிலைகள் நன்றாக காய்ந்து வருகின்றன. அவ்வப்போது மழை பெய்து வருவதால், அதை கவனமாக பாதுகாத்தும் வருகிறோம். அதன் பின், வர்ணம் பூசப்பட்டு, 5,000 - 40 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.