வடக்குவாசல் செல்வி அம்மன் கோயிலில் ஆடிப்பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூலை 2018 11:07
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரில் ஆடிப்பொங்கல் விழாவையொட்டி ஆடு கோழிகள் பலியிட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இங்குள்ள பழமையான வடக்குவாசல் செல்வி அம்மன் கோயிலில் ஆடி மாத 2 வது செவ்வாய்க்கிழமையான நேற்று ஆடிப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 6:00 மணிமுதல் மாலை 5:00 மணி வரை இப்பகுதி மக்கள் குடும்பத்துடன் கோயில் திடலுக்கு வந்து ஆடு, கோழிகளை அம்மனுக்கு நேர்த்திக்கடனாக பலியிட்டனர். பின்னர் அந்த இடத்திலேயே பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. விழாவில் அ.காளாப்பூர், கல்லம்பட்டி, கரடிபட்டி, மூவன்பட்டி, முறையூர், சூரக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.