பெரியகுளம்: அறநிலையத்துறைக்கு உட்பட்ட பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழாவுக்கு ஜூலை 3ல் கம்பம் நடப்பட்டது. ஜூலை 9ல் கொடியேற்றத்துடன் துவங்கி ஜூலை 18 வரை 10 நாட்கள் விழா நடந்தது. நேற்று மறுபூஜையை முன்னிட்டு, தீர்த்ததொட்டியில் தீர்த்தவாரி உற்ஸவம், பால்குடம் எடுத்து முக்கிய வீதி வழியாக வந்த ஏராளமான பக்தர்கள் , கோயிலில் அம்மனுக்கு பாலாபிேஷகம் செய்தனர். அம்மன் மின் அலங்கார ரதத்தில் வீதி உலா வந்தார். ஏற்பாடுகளை செயல்அலுவலர் அண்ணாதுரை , தமிழ்நாடு தையல்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் செய்திருந்தனர்.