ஏர்வாடி சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூலை 2018 12:07
கீழக்கரை: ஏர்வாடியில் அல்-குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராகீம் ஷஹீது பாதுஷா நாயகம் தர்காவில் சந்தனக்கூடு விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.844ம் ஆண்டு சந்தனக்கூட்டிற்கான மவுலீது எனும் புகழ்மாலை கடந்த ஜூலை 14ல் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் அடிமரம் ஊன்றப்பட்டது. நேற்று ஏர்வாடி நல்ல இப்ராகீம் சந்தனக்கூடு தைக்காவில் இருந்து ஊர்வலமாக தர்கா வந்தனர். மாலை 6:30 மணியளவில் யானை மீது கொண்டு வரப்பட்ட கொடியினை ஹக்தார் நிர்வாகத்தினர் கொடியேற்றினர். இவ்விழாவில் அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஏர்வாடி தர்கா ஹக்தார் பொதுமகா சபையினர் செய்திருந்தனர். ஆக.5 (ஞாயிறு) மாலை 4:00 மணிக்கு சந்தனக்கூடு விழா ஆரம்பமாகி மறுநாள் அதிகாலை 4:00 மணியளவில் மக்பராவில் புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்கிறது.