ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூலை 2018 12:07
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்தனர். ரிஷிவந்தியத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா, கடந்த 16 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தினமும் பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா நடந்தது. கடந்த 22 ம் தேதி அர்த்தநாரீஸ்வரர் சுவாமிக்கும், முத்தாம்பிகை அம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.தேர்திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை 10:00 மணிக்கு மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு தேனபிஷேகத்துடன் உச்சிகால பூஜைகள் நடந்தது. பூஜைக்கான ஏற்பாடுகளை நாகராஜ், சோமு குருக்கள் நடத்தினர். சர்வ அலங்காரத்துடன் புறப்பட்ட பஞ்சமூர்த்திகளுக்கு கோவில் முன்பு கந்தவிலாஸ் ஜெயக்குமார் தலைமையில், மண்டகப்படி நிகழ்ச்சி நடந்தது. மாலை 3:00 மணிக்கு கேட்டை நட்சத்திரத்தில் ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 4:40 மணிக்கு தேர் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.