பதிவு செய்த நாள்
25
ஜூலை
2018
12:07
சேலம்: லஷ்மி நரசிம்மருக்கு, 40 வகை அன்னப்பிரசாதங்கள் படைத்து, பூஜை நடந்தது. ஆண்டு முழுவதும், பெருமாளுக்கு படைக்கும் நிவேதனங்களில் குறையிருந்தால், அதை நிவர்த்தி செய்ய, ஒரு நாளில், ஏராளமான அன்னப்பிரசாதங்கள் வைத்து, சிறப்பு பூஜை செய்யப்படும். அதன்மூலம், பஞ்சம், பட்டினியின்றி சுபிட்சமாக இருக்கும் என்பது, மக்களின் நம்பிக்கை. அதன்படி, ஆடி மாதத்தில், ஜோஷ்டாபி ?ஷகம் எனும் அன்னப்பாவாடை உற்சவம், சேலம், மன்னார்பாளையம் பிரிவு, லஷ்மி நரசிம்மர் கோவிலில், நேற்று காலை நடந்தது. அதில், மூலவர் நரசிம்மருக்கு, சிறப்பு யாகத்தில் பூஜை செய்த புனிதநீரால் அபி?ஷகம் செய்து, சர்வ அலங்காரம் செய்யப்பட்டது. மாலை, பொங்கல், புளியோதரை, தயிர்சாதம், லட்டு, வடை, முறுக்கு உள்பட, 40 வகை அன்னப்பிரசாதங்களை, மூலவர் முன் படைத்து, பூஜை நடந்தது. சுவாமியை தரிசித்த பக்தர்களுக்கு, பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், பட்டாச்சாரியார்கள் செய்திருந்தனர்.